
பொது தமிழ் - 2
101.”ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?
பசு
102. இசையை வெளிப்படுத்தும் சொல் எது?
பாடு
103. ”கட கட” என்பது?
இரட்டைக்கிளவி
104. ”முகமை” என்பதன் பொருள் என்ன?
கிடங்கு
105. திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை ____________ அழிந்தது.
தோப்பு
106. ”அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச் செய்தவன் யார்?” என்று பாடியவர் யார்?
அழ. வள்ளியப்பா
107. ”மாரிக் காலம்” என்றால் என்ன?
மழைக்காலம்
108. அ___ல் எங்கே போகிறது?
ணி
109. இ___ ___ ர். பூர்த்தி செய்க?
ள, நீ
110. பணிப்பென் என்பதன் பொருள் என்ன?
வேலைக்காரி
111. சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
கூத்தனூர்
112. இராமாயணத்தில் விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் யார்?
பரசுராமன்
113. ராகங்கள் மொத்தம் எத்தனை?
16
114. மகாபாரதத்தில் கிருஷ்ணன் எந்த மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தார்?
கோவர்த்தன மலை
115. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது?
2008
116. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழிஎது?
தமிழ்
117. மூதுரையை இயற்றியவர் யார்?
அவ்வையார்
118. யாருக்கு செய்த உதவி கல்மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும்?
நல்லவர்
119. ”மூதுரை”-இயற்றியவர்?அவ்வையார்
120.”பாண்டியன் பரிசு”-இயற்றியவர்?
பாரதிதாசன்
121.”திருக்குறள்”-இயற்றியவர்?
திருவள்ளுவர்
122.”நறுந்தொகை”-இயற்றியவர்?
அதிவீரராம பாண்டியன்
123. காலையில் __________ நன்று?
படித்தல்
124. மாலையில் _____________ சிறந்த உடற்பயிற்சி?
விளையாடுதல்
125. தமிழன் மானத்தைப் பெரிதெனக் கருதி ____________ இழப்பான்.
உயிர்
126. வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?
அதிவீரராம பாண்டியன்
127. பிறரிடம் தமிழன் __________ வாங்கிட கூசிடுவான்?
தானம்
128. பொம்மைகளைக் கண்டு மயங்காத ____________ உண்டோ?
குழந்தைகள்
129. அறிவியல் பாடங்களைப் படித்தால் அறிவு _________?
வளரும்
130. வேளாண்மையில் ___________ முறைகளைப் புகித்திட வேண்டும்?
இயற்கை
131. தங்கத்தின் விலை _______ கொண்டிருக்கிறது?
ஏறி
132. சொற்கள் எத்தனை வகைப்படும்?
4
133. காலத்தைக் காட்டும் சொல்லுக்கு என்ன பெயர்?
வினைச் சொல்
134. காலம் எத்தனை வகைப்படும்?
3
135. ”இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்”-இது எந்த காலத்தைக்குறிக்கிறது?
இறந்த காலம்
136. ”மருமக்கள் வழிமான்மியம்” என்ற நூலை இயற்றியவர்?
கவிமணி தேசிக விநாயகம்
137. நன்செய்யும் ____________ நாட்டுக்கு அழகு?
புன்செய்
138. இரவு _______ பாராது உழைத்தால் முன்னேறலாம்.
பகல்
139. மாணவர்களில் பலர் விளையாடச் சென்றனர்_______ விளையாடச் செல்லவில்லை.
சிலர்
140. செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்
141.திருக்குறளின் சிறப்புப் பெயர்கள்?
உலகப்பொதுமறை,தெய்வநூல்,முப்பால்,உத்திரவேதம்,பொய்யாமொழி, வள்ளுவப்பயன்
142. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்?
குடிமக்கள் காப்பியம்,ஒற்றுமைக் காப்பியம்,,மூவேந்தர் காப்பியம்,முதல் காப்பியம்
தேசியக் காப்பியம்,முத்தமிழ்க் காப்பியம்,சமுதாயக் காப்பியம்
143. சீவக சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள்?
மணநூல்,முக்தி நூல்
144. அகநானூற்றின் சிறப்புப் பெயர்?
நெடுந்தொகை
145. பெரிய புராணத்தின் சிறப்புப் பெயர்?
திருத்தொண்டர் புராணம்
146. இலக்கண விளக்கத்தின் சிறப்புப் பெயர்?
குட்டித் தொல்காப்பியம்
147. வெற்றி வேற்கையின் சிறப்புப் பெயர்?
நறுந்தொகை
148. மூதுரையின் சிறப்புப் பெயர்?
வாக்குண்டாம்
149. மணிமேகலையின் சிறப்புப் பெயர்?
மணிமேகலைத் துறவு
150. நாலடியாரின் சிறப்புப் பெயர்?
வேளாண் வேதம்
151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்?
தமிழ் மூவாயிரம்
152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்?
அறிவுரைக் கோவை
153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
திரு.வி.கலியாண சுந்தரம்
154. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
உ.வே.சாமிநாதர்
155. நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?
மீனாட்சி சுந்தரனார்
156. பண்டித மணி என அழைக்கப்படுபவர் யார்?
கதிரேசஞ் செட்டியார்
157. தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பம்மல் சம்பந்தனார்
158. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்?
சங்கரதாஸ் சுவாமிகள்
159. பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள்?
புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக் குயில்
160. கவிமணி என்ற சிறப்பிற்குரியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை
161.நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?
வெ. இராமலிங்கம் பிள்ளை
162. குழந்தைக் கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர்?
அழ. வள்ளியப்பா
163.தொண்டை சீர் பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்?
சேக்கிழார்
164. திராவிட சிசு என்ற சிறப்பிற்குரியவர்?
திருஞானசம்பந்தர்
165. திருநாவுக்கரசரின் சிறப்புப் பெயர்கள்?
வாகீசர், தருமசேனர், அப்பர்
166. மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்?
அமுது அடியடைந்த அன்பர்
167. தம்பிரான் தோழர் எனப்படுபவர் யார்?
சுந்தரர்
168. கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புடையவர்?
கம்பர்
169. ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர்?
கவிராட்சஸன்
170. பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்?
உடுமலை நாராயணகவி
171. திரையிசைத் திலகம் யார்?
மருதகாசி
172. _____அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம்
பெற்றிருந்தனர்?
கிருஷ்ணதேவராயர்
173. தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர்?
மெகஸ்தனிஸ்
174. ”வாரணம் ஆயிரம்” என்ற பாசுரத்தைப் பாடியவர் யார்?
ஆண்டாள்
175. ”மாதனு பங்கி” என்றழைக்கப்படுபவர்?
திருவள்ளுவர்
176. செஞ்சியை ஆண்ட மன்னர்களில் _____தான் புகழ் பெற்ற மன்னன்?
தேசிங்கு ராசன்
177. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி
எது?
தமிழ்
178. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு? 1)பெறு 2)நடு 3)சுடு 4)பேறு
பேறு
179. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு? 1)தழால் 2)வெகுளி 3)மாட்சி 4)உணர்ச்சி
மாட்சி
180.”வானினும்” – இலக்கணக் குறிப்பு தருக?
உயர்வுச் சிறப்பும்மை
181. கள்ளைச் ”சொல் விளம்பி” என்று கூறுவது?
குழூஉக்குறி
182. ”கதவில்லை” – இத்தொடரில் அமைந்த புணர்ச்சி?
முற்றியலுகரப் புணர்ச்சி
183. இடையுகரம் இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு?
கரியன்
184. ஆதிநீடலுக்கு எடுத்துக்காட்டு?
பாசடை
185. அடியகரம் ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு?
பைந்தமிழ்
186. தன்னொற்றிரட்டலுக்கு எடுத்துக்காட்டு?
வெற்றிலை
187. இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மரம்
188. திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மஞ்ஞை
189. திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
பெற்றம்
190. வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மதம்
191. ”நல்குரவு” – எதிர்ச்சொல் தருக?
வலிமை
192. ”கேளிர்” – எதிர்ச்சொல் தருக?
பகை
193. “மகிழ்ச்சி” எனும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது?
ஓ
194. ”தே” எனும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சொல் எது?
அருள்
195. ”வெகுளி” என்னும் தொழ்ற்பெயரின் வேர்ச்சொல் அறிக?
வெகுள்
196. முதனிலைத் திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு?
கேடு
197. ”எல்” எனும் சொல்லின் பொருள்?
கதிரவன்
198. “எள்” எனும் சொல்லின் பொருள்?
எண்ணை வித்து
199. ”சுளி” எனும் சொல்லின் பொருள்?
சினத்தல்
200. “சுழி” எனும் சொல்லின் பொருள்?
கடல்
0 Comments