1. தமிழ் என்ற சொல்லிலிருந்து திராவிடம் என்ற சொல் தோன்றியது என்று கூறியவர்
அ) கால்டுவெல், ஆ) வி.ஆர்.ஆர். தீட்சிதர், இ) எல்லீஸ், ஈ) ஜி.யூ. போப்.
2. 17ஆம் நூற்றாண்டில் மேலை நாட்டவரால் தமிழ் எவ்வாறு அழைக்கப்பட்டது
அ)மலபார் மொழி, ஆ) இனிமை மொழி, இ)செம்மொழி, ஈ) திராவிடமொழி.
3. ஐஞ்சிறு காப்பியங்களில் காண்டம் என்னும் பகுப்பு இடம்பெறும் காப்பியம்?
அ) சூளாமணி, ஆ) உதயணகுமார காவியம், இ) நீலகேசி, ஈ) யசோதர காவியம்.
4. திருத்தம் பெற்ற வழூஉச் சொல்லைத் தேர்ந்தெடுக்க?
அ) குடக்கூலி, ஆ) சமயல், இ)கோத்து, ஈ) கோடாலி.
5. சங்கமலி தமிழ், சங்கமுகத் தமிழ் என்னும் சொற்றொடர் யாருடைய பாடலில் இடம் பெற்றுள்ளது?
அ) சீத்தலைச் சாத்தானார், ஆ) அப்பர், இ) திருமங்கை ஆழ்வார், ஈ) ஒளவையார்
6. பாரதம் பாடிய பெருந்தேவனார் நற்றிணையில் எந்தக் கடவுளை வாழ்த்திப் பாடுகிறார்?
அ) முருகன், ஆ) சிவன், இ) திருமால், ஈ) இந்திரன்.
7. நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு எனத் தொடங்கும் பத்துப்பாட்டு நூல்?
அ)குறிஞ்சிப்பாட்டு, ஆ) முல்லைப்பாட்டு, இ) நெடுநல்வாடை, ஈ) பட்டினப்பாலை.
8. தமிழ்மொழி எவ்வகைப்பட்ட மொழி?
அ) உட்பிணைப்பு நிலை, ஆ) தனிநிலை, இ) ஒட்டுநிலை, ஈ) கூட்டுநிலை
9. புரட்சித்துறவி என அழைக்கப்படுபவர்
அ)இராமலிங்க அடிகள், ஆ) தாயுமானவர், இ) அருணகிரிநாதர், ஈ) பட்டினத்தார்.
10. ஒவ்வொரு ஆங்கில வருடப்பிறப்பு தோறும் ஒரு புறப்பாட்டினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
அ) வீரமாமுனிவர், ஆ) ஜி.யூ.போப், இ) சீகன் பால்கு, ஈ) எல்லீஸ்
11. தமிழுக்குத் செம்மொழித் தகுதி வழங்கவேண்டும் என்று முதலில் கூறிய தமிழர் யார்?
அ)பரிதிமாற்கலைஞர், ஆ) சி.வை. தாமோதரம் பிள்ளை, இ) இரா.இராகவை யங்கார், ஈ) பூர்ணலிங்கம்பிள்ளை.
12. பதிற்றுப்பத்தில் நாற்பது நூறாயிரம் பொன்னும் சேரநாட்டின் ஒரு பகுதியையும் பரிசாகப் பெற்றவர் யார்?
அ) குமட்டூர் கண்ணனார், ஆ) காப்பியாற்றுக் காப்பியனார், இ) கபிலர், ஈ) அரிசில்கிழார்.
13. ஒரிசாவில் வழங்கும் மொழி எது?
அ) கோலமி, ஆ) நாயக்கி, இ) பிராகுயி, ஈ) கடப்பா
14. வினையே ஆடவர்க்குயிரே என்பது யார் பாடிய பாடல்?
அ) கபிலர், ஆ) பெருங்கடுங்கோ, இ) வெள்ளி வீதியார், ஈ) நல்லுருத்திரன்.
15. உள்ளுறை குறித்து தொல்காப்பியத்தின் எந்த இயல் விளக்குகிறது?
அ) களவியல், ஆ) உவமவியல், இ) பொருளியல், ஈ)கற்பியல்.
16. தொண்டகம் எத்திணைக்குரிய பறை?
அ) பாலை, ஆ) குறிஞ்சி, இ) மருதம், ஈ) நெய்தல்.
17. களவழி நாற்பதில் சோழன் செங்கண்ணானோடு போர் புரிந்த மன்னன் யார்?
அ) இமயவரம்பன், ஆ) இளஞ்சேரல் இரும்பொறை, இ) கணைக்கால் இரும்பொறை, ஈ) பெருஞ்சேரல் இரும்பொறை.
18. தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள் என்று கூறியவர்?
அ) கெல்லட், ஆ) அமினோ, இ) மாகஸ்முல்லர், ஈ) டாக்டர் கிரால்
19. கெளத்துவ மணியின் அம்சமாகப் பிறந்தவர் யார்?
அ) திருமழிசை ஆழ்வார், ஆ) குலசேகர ஆழ்வார், இ) திருமங்கை ஆழ்வார், ஈ) நம்மாழ்வார்.
20. வெய்யோன் பாடு என்பது எத்திணைக்குரிய சிறுபொழுது?
அ) பாலை, ஆ) நெய்தல், இ) குறிஞ்சி, ஈ) மருதம்.
21. மணிமேகலையில் ஒரேயொரு காதை மட்டும் இணைகுறள் ஆசிரியப்பாவால் ஆனது அது எந்தக் காதை?
அ) சமயணக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை, ஆ) உலக அறவி புக்க காதை, இ) விழவூரெடுத்த காதை, ஈ) ஆதிரை பிச்சையிட்ட காதை.
22. ஐஞ்சிறுங் காப்பியம் என்ற வழக்கத்தினை ஏற்படுத்தியவர் யார்?
அ) உ.வே.சாமிநாதையர், ஆ) சி.வை.தாமோதரம்பிள்ளை, இ) வையாபுரிப் பிள்ளை, ஈ) இரா. இராகவையங்கார்
23. இறகு – எறகு என மொழி முதலில் இகரத்தை அடுத்த அகரம் ஏறிய மெய்வந்தால் இகரம் எகரமாகும் தன்மை எந்தக் காலத்தில் நிகழ்ந்தது?
அ) பாண்டியர் காலத்தமிழ், ஆ) பல்லவர்காலத்தமிழ், இ) சோழர்காலத் தமிழ், ஈ) சங்கமருவிய காலத்தமிழ்.
24. வடமலைப் பிறந்த பொன்னும் மணியும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் – கூறும் நூல்
அ) பட்டினப்பாலை, ஆ) மதுரைக்காஞ்சி, இ) மலைபடுகடாம், ஈ) நெடுநல்வாடை
25. நவிரமலை யாருக்கு உரியது?
அ) ஓரி, ஆ) அதியன், இ) நன்னன், ஈ) ஆய்
26. உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான் என்னும் கூற்று இடம்பெறும் நூல்
அ)கம்பராமாயணம், ஆ) பெரியபுராணம், இ) கந்தபுராணம்,ஈ) வில்லிபாரதம்.
27. தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற் புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?
அ) பாரதியார், ஆ) பாரதிதாசன், இ) திருத்தக்கதேவர், ஈ) இளங்கோவடிகள்
28. பாலைத்திணைக்குரிய உரிய ஊர் எவ்வாறு அழைக்கப்படும்?
அ) குறும்பு, ஆ) சிறுகுடி, இ) பாடி, ஈ) மூதூர்.
29. இஸ்லாமியத் தாயுமானவர் என்று போற்றப்பட்டவர் யார்?
அ) குணங்குடி மஸ்தான் ஆ) உமறுப்புலவர், இ)வண்ணக்களஞ்சியப் புலவர், ஈ) சேகனாப் புலவர்.
30. தமிழகம் முழுவதையும் காலால் அளந்தோம்
மக்கள் மனங்களை யாழால் அளந்தோம் எனப் பாடியவர் யார்?
அ) பரணர், ஆ) ஒளவையார், இ) கபிலர், ஈ) நல்லந்துவனார்.
31. மூலத்திராவிட மொழியிலிருந்து முதலில் பிரிந்த மொழி
அ) மலையாளம், ஆ) தமிழ், இ) துளு, ஈ) தெலுங்கு.
32. தமிழ்கெழு மூவர் காக்கும் நிலம் என்னும் தொடர் இடம்பெற்ற நூல்?
அ) குறுந்தொகை, ஆ) புறநானூறு, இ) அகநானூறு, ஈ) நற்றிணை.
33. மந்திரமாவது நீறு என்னும் அடியை ஞானசம்பந்தர் எதன் காரணமாகப் பாடினார்?
அ) பால் குடித்தபோது பாடியது, ஆ) கதவு திறக்கப் பாடியது, இ) மன்னன் நோய்தீர்க்கப் பாடியது, ஈ) புனல் வாதத்தின் போது பாடியது.
34. முச்சங்கங்களும் முழு உண்மை என்று கூறியவர் யார்?
அ) கே.ஏ.நீலகண்டசாஸ்திரி, ஆ) கா. சு.பிள்ளை, இ) பி.டி. சீனிவாச ஐயங்கார், ஈ) சேஷகிரி சாஸ்திரி
35. வீரர் என்னும் சொல் எந்நூலில் இடம்பெற்றுள்ளது?
அ) பதிற்றுப்பத்து, ஆ) அகநானூறு, இ) புறநானூறு, ஈ) கலித்தொகை.
36. சமயக்குரவர் நால்வரில் சற்குரு மார்க்கம் உடையவர் யார்?
அ) சுந்தரர், ஆ) மாணிக்கவாசகர், இ) ஞான சம்பந்தர், ஈ) அப்பர்.
37. குறைச்சொற்கிளவி என்பது?
அ)உரிச்சொல், ஆ) இடைச்சொல், இ)வினைச்சொல், ஈ) பெயர்ச்சொல்.
38. சேக்கிழாரின் பெரிய புராணம் எத்தனை தொகை அடியார்களைப் பாடுகின்றது?
அ) 63, ஆ) 9, இ) 10, ஈ) 11
39. திருவாய்மொழியின் 9000 படி உரையை எழுதியவர் யார்?
அ)நம்பிள்ளை,ஆ)நஞ்சீயர்,இ)ஆளவந்தான்பிள்ளை,ஈ)வடக்குத் திருவீதிப்பிள்ளை.
40. திருக்குறளை இந்தியில் மொழிபெயர்ப்பு செய்தவர் யார்?
அ)அப்பாதீட்சிதர், ஆ)பி.டி.ஜைன், இ) கோவிந்த பிள்ளை, ஈ) வைத்தியநாத நாதா
41. கிறிஸ்தவர்களின் கலைக்களஞ்சியம்
அ)தேம்பாவணி,ஆ)இரட்சண்யயாத்திரீகம்,இ)இரட்சண்யமனோகரம்,ஈ)ஏசு காவியம்.
42. தூதுப் பொருள் பத்தினையும் வைத்து தூது இலக்கியம் பாடியவர் யார்?
அ)அமிர்தம்பிள்ளை, ஆ) பத்மகிரியார், இ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை, ஈ) கச்சியப்ப முனிவர்.
43. மருதநில நந்தாவிளக்கம் என அழைக்கப்படும் சிற்றிலக்கியம் எது?
அ) குறவஞ்சி, ஆ) மடல், இ) பள்ளு, ஈ) உலா.
44. நன்னூல் விருத்தியுரை செய்தவர் யார்?
அ)சங்கரநமச்சிவாயர்,ஆ)மயிலைநாதர்,இ)கூழங்கைத்தம்பிரான்,ஈ)ஆறுமுக நாவலர்.
45. உவமைப்போலி என்ற பெயருடைய அணி?
அ) தன்மை அணி, ஆ) ஏதுவணி, இ) ஒட்டணி, ஈ) உருவகவணி
46. மாறனலங்காரம் குறிப்பிடும் அணிகளின் எண்ணிக்கை எத்தனை?
அ) 35, ஆ) 64, இ) 54, ஈ) 44
47. சீவகனுக்குக் காமதிலகம் எனப் பட்டம் சூட்டியவர் யார்?
அ) நச்சினார்க்கினியர், ஆ) திருத்தக்க தேவர், இ) நாதகுத்தனார், ஈ) கந்தியார்.
48. வெறியாட்டு என்பது எப்புறத்திணைக்குரிய படலம்?
அ) கரந்தை, ஆ) வெட்சி, இ) வஞ்சி, ஈ) காஞ்சி.
49. முதல் தமிழ் – ஆங்கில அகராதியைத் தந்தவர்?
அ) லாசரஸ், ஆ) வீரமாமுனிவர், இ) பெப்ரீஷியஸ், ஈ) எமனோ.
50. பின்வருவனவற்றுள் தொல்காப்பியப் புறத்திணையியலில் இடம்பெறாத திணை?
அ) தும்பை, ஆ) நொச்சி, இ) வஞ்சி, ஈ) பாடாண்.
51. ல,ள எழுத்துக்கள் எவ்வகை ஒலியன்கள்?
அ) மருங்கொலி, ஆ) உரசொலி, இ) ஆடொலி, ஈ) வருடொலி.
52. தமிழில் ஐந்திலக்கணம் கூறும் நூல்கள் மொத்தம் எத்தனை?
அ) 4, ஆ) 5, இ) 3, ஈ) 6.
53. 1-3-4 சீரில் அமையும் தொடை விகற்பம் யாது?
அ) கீழ்க்கதுவாய், ஆ) மேற்கதுவாய், இ) கூழை, ஈ) பொழிப்பு.
54. செல்வம் என்பது எந்த மெய்ப்பாட்டின் உட்பிரிவு?
அ) நகை, ஆ) பெருமிதம், இ) உவகை, ஈ) மருட்கை.
55. கைம்மாறு வேண்டா கடப்பாடு, மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு – என்னும் குறளில் இடம்பெற்றுள்ள அணி?
அ) வேற்றுமையணி, ஆ) வேற்றுப்பொருள் வைப்புஅணி, இ)பின்வருநிலையணி, ஈ) தீவக அணி.
56. அ. சீனிவாசராகவனின் வெள்ளைப் பறவை என்னும் கவிதைத் தொகுதிக்கு எந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது?
அ) 1967, ஆ) 1968, இ) 1969, ஈ) 1970.
57. பத்துப்பாட்டில் வஞ்சியடி கலந்த ஆசிரியப்பா நூல்கள் யாவை?
அ) பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி, ஆ) நெடுநல்வாடை, பட்டினப்பாலை, இ) மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, ஈ) முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை.
58. வெள்ளாடு என்பது,
அ) இலக்கணப் போலி, ஆ) மங்கலம், இ) மரூஉ, ஈ) இடக்கரடக்கல்.
59. பற்றி, குறித்து என்பன எவ்வேற்றுமையின் சொல்லுருபுகள்?
அ) இரண்டாம் வேற்றுமை, ஆ) மூன்றாம் வேற்றுமை, இ) நான்காம் வேற்றுமை, ஈ) ஐந்தாம் வேற்றுமை
60. செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களை வேண்டிய இடங்களில் சேர்த்துப் பொருள் கொண்டால்?
அ) தாப்பிசை, ஆ) அளைமறி, இ) கொண்டுகூட்டு, ஈ)அடிமறி
61. போட்டியில் வெற்றிபெற்று பெண்ணைத் திருமணம் செய்தால் அது?
அ) அசுரம், ஆ) இராக்கதம், இ) பைசாசம், ஈ)ஆரிடம்.
62. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புகளைப் பெற்றுவரும் கலிப்பா வகை எது?
அ) அம்போதரங்கம், ஆ) ஒத்தாழிசை, இ) நேரிசை, ஈ) கொச்சகம்.
63. ஜெராக்ஸ் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்
அ) நகல், ஆ) தொலைநகல், இ) ஒளிப்படி, ஈ) ஒளிப்படம்.
64. அ) வ.வே.சு. ஐயர் - கயிற்றரவு
ஆ) புதுமைப்பித்தன் - லைலா மஜ்னு
இ) கு.ப.ராஜகோபாலன் - ஏன்
ஈ) மெளனி - விடியுமா
அ) 3,1,2,4, ஆ) 2,1,4,3,இ)4,3,2,1 ஈ) 2,3,4,1.
65. வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் எனப் புகழ்ந்தவர் யார்?
அ)சிவப்பிரகாசர், ஆ) சிவஞானமுனிவர், இ) ஆறுமுகநாவலர், ஈ) சாமிநாததேசிகர்.
66. உயிர் பன்னிரெண்டும் மெய்யெழுத்தில் இடையின எழுத்துக்கள் ஆறும் பிறக்கும் இடம்?
அ) மார்பு, ஆ) மிடறு, இ) தலை, ஈ) மூக்கு.
67. அ) பிரகலாதா - பரிதிமாற்கலைஞர்
ஆ) சூர்ப்பனகை – சோ.
இ) சம்பவாமி யுகே யுகே – பம்மல் சம்பந்த முதலியார்
ஈ) கள்வர் தலைவன் – சங்கரதாஸ் சுவாமிகள்
அ) 4,1, 2, 3. ஆ) 4,3,2,1, இ) 3,2,1,4, ஈ) 2,3,4,1.
68. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் – என்னும் குறளில் இடம்பெற்றுள்ள அணி
அ) உயர்வுநவிற்சி, ஆ) தற்குறிப்பேற்றம், இ) ஏது, ஈ) வஞ்சப்புகழ்ச்சி.
69.தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே என்னும் தொடர் இடம்பெற்றுள்ள இலக்கண நூல் யாது?
அ)தொல்காப்பியம், ஆ)நன்னூல், இ)இலக்கண விளக்கம்,ஈ)தொன்னூல் விளக்கம்.
70. மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா? என்று பாடியவர்?
அ) பாரதியார், ஆ) கவிமணி, இ) பாரதிதாசன், ஈ) நாமக்கல் கவிஞர்.
71. திராவிட சாஸ்திரி என பரிதிமாற்கலைஞரை அழைத்தவர் யார்?
அ) உ.வே.சாமிநாதையர், ஆ) சி.வை.தாமோதரம்பிள்ளை, இ) பம்மல்சம்பந்த முதலியார், ஈ) மறைமலையடிகள்.
72. மீனாட்சிக்குறம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ) குமரகுருபரர், ஆ) வரத நஞ்சியப்பப் பிள்ளை, இ)விசுவநாத சாஸ்திரி, ஈ) வேதநாயக சாஸ்திரி.
73. கமலம், கஞ்சம், முண்டகம் என்னும் சொற்கள் எவ்வகைப்பட்டவை?
அ) ஒருபொருள் குறித்த பலசொல், ஆ) பலபொருட்குறித்த ஒருசொல், இ)ஒரு பொருள் குறித்த பல பெயர்த் திரிசொல், ஈ) ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்.
74. வீரமாமுனிவர் யாரிடம் தமிழ் கற்றார்?
அ) கிருஷ்ணப்பிள்ளை, ஆ) தாண்டவராய முதலியார், இ) சுப்ரதீபக் கவிராயர், ஈ) கடிகைமுத்துப் புலவர்.
75. கிறு என்ற நிகழ்கால இடைநிலை முதன்முதலாக இடம்பெறத் தொடங்கிய காலம் யாருடையது?
அ) சங்கம் மருவியகாலம், ஆ) சங்ககாலம், இ) தொல்காப்பிய காலம், ஈ) பல்லவர் காலம்.
76. ஜி.யு.போப் மொழிபெயர்க்காத நூல் எது?
அ) திருவாசகம், ஆ) புறப்பொருள் வெண்பாமாலை, இ) பெருங்கதை, ஈ) புறநானூறு.
77. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை சரித்திரம் எழுதியவர் யார்?
அ) சி.வை. தாமோதரம்பிள்ளை, ஆ) உ.வே.சாமிநாதையர், இ) ஆறுமுகநாவலர், ஈ) சுப்பராய செட்டியார்.
78. பின்வரும் நாடகங்களுள் பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகம் எது?
அ) நல்லதங்காள், ஆ) கலாவதி, இ) சதிசுலோசனா, ஈ) வீர அபிமன்யு.
79. தமிழ் உரைநடையின் வேந்தராகப் போற்றப்பட்டவர் யார்?
அ) வீரமாமுனிவர், ஆ) மறைமலையடிகள், இ) ஆறுமுகநாவலர், ஈ) பண்டிதமணி
80. தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தன் போல் ஒன்று விடாமல் குறித்து வைத்துள்ளார்? வ.வே.சு.ஐயரின் இந்தக் கூற்று யாரைக் குறிப்பிடுகிறது.
அ) மு.வரதராசனார், ஆ) அண்ணா, இ) ஆனந்தரங்கர், ஈ) வேதநாயகம் பிள்ளை.
81. இந்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்ற நாடக ஆசிரியர் யார்?
அ) பம்மல் சம்பந்த முதலியார், ஆ) பரிதிமாற்கலைஞர், இ) சங்கரதாஸ் சுவாமிகள், ஈ) மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை.
82. குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?
அ) உ.வே.சாமிநாதையர், ஆ) நாராயணசாமி ஐயர், இ) இரா. இராகவையங்கார், ஈ) செளரிப்பெருமாளரங்கன்.
83. தமிழ்ப்பொழில் என்னும் இதழை வெளியிட்ட நிறுவனம்?
அ) மதுரைத் தமிழ்ச்சங்கம், ஆ) கரந்தைத் தமிழ்ச்சங்கம், இ) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஈ) சென்னை கல்விச்சங்கம்.
84. சிறுபத்திரிக்கைகளின் வரலாறு எந்த இதழிலிருந்து தொடங்கப்படுகிறது?
அ) கலாமோகினி, ஆ) எழுத்து, இ) கசடதபற, ஈ) ஆனந்தவிகடன்.
85. பக்தி இலக்கியங்களுக்கு உரை எழுதும் மரபு இச்சமயத்தவரிடம் இல்லை?
சமணம், ஆ) சைவம், இ) வைணவம், ஈ) இஸ்லாமியம்.
86. சோடசாவதானம் என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) வேலாயுதப் புலவர், ஆ) சபாபதி முதலியார், இ) சுப்பராய செட்டியார், ஈ) செய்குதம்பிப் பாவலர்.
87. கள்விகுதி அஃறிணையிலிருந்து உயர்திணைக்கும் மாறிய காலம் எக்காலம்?
அ) சங்கம் மருவிய காலம், ஆ) பல்லவர் காலம், இ) சோழர்காலம், ஈ) நாயக்கர் காலம்.
88. பத்துப்பாட்டு என்ற சொல்லாட்சியை முதன்முதல் பயன்படுத்திய உரையாசிரியர்?
அ)மயிலைநாதர்,ஆ)அடியார்க்கு நல்லார், இ) இளம்பூரணர், ஈ) சங்கரநமச்சிவாயர்.
89. திருக்குறளில் இரு அதிகாரங்களுக்கு அமைந்த ஒரே தலைப்பு?
அ) குறிப்பறிதல், ஆ) குறிப்பு அறிவுறுத்தல், இ)புலவி ,ஈ) நல்குரவு.
90. இலக்கண விளக்கம் என்னும் நூலுக்கு எதிராக இலக்கண விளக்கச் சூறாவளி என்னும் மறுப்பு நூலை எழுதியவர்?
அ)வீரமாமுனிவர்,ஆ)சிவஞானமுனிவர், இ) ஆறுமுகநாவலர், ஈ) சுப்பராய தேசிகர்
91. தொப்பி என்பது என்ன மொழிச்சொல்?
அ) உருது, ஆ) இந்துஸ்தானி, இ) பாரசீகம் ,ஈ) அரபு.
92. இயற்சீர் நான்கோடு நேர் நேர் சேர்ந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
அ) தண்பூ, ஆ) தண்ணிழல், இ) நறும்பூ, ஈ) நறுநிழல்.
93. அன்று வேறு கிழமை என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
அ) ஞானக்கூத்தன், ஆ) அபி, இ) இன்குலாப், ஈ) தமிழன்பன்.
94. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் யார்?
அ) காங்கேயர், ஆ) மண்டல புருடர், இ) ரேவணசித்தர், ஈ) காளிங்கர்.
95. புதுமைப்பித்தனால் எழுதப்படாத படைப்பு எது?
அ) பொன்னகரம், ஆ) கயிற்றரவு, இ) முள்ளும் ரோஜாவும், ஈ) கல்யாணி
96. சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையை மையமாக வைத்து எழுதப்பட்ட ராஜம்கிருஷ்ணனின் புதினம் எது?
அ) கரிப்பு மணிகள், ஆ) கூட்டுக்குஞ்சுகள், இ) வேருக்குநீர், ஈ) குறிஞ்சித்தேன்.
97. 2013ஆம் ஆண்டுவரை சாகித்ய அகாதெமி விருதுபெற்ற நாவல்களின் எண்ணிக்கை எத்தனை?
அ) 22, ஆ) 21, இ) 24, ஈ) 23.
98. வடமொழி தொனிக் கோட்பாட்டுடன் தொடர்புடையது எது?
அ) உள்ளுறை, ஆ) இறைச்சி, இ) உவமை, ஈ) மெய்ப்பாடு.
99. பாரதிக்குப்பின் தமிழ்நாட்டின் ஓர் உண்மையான கவி பாரதிதாசன் என்று புகழ்ந்தவர்?
அ) புதுமைப்பித்தன், ஆ) கு.ப.ராஜகோபாலன், இ) மெளனி, ஈ) நா.பிச்சமூர்த்தி.
100. கற்பிற்குரிய கிளவித்தொகைகள் எத்தனை?
அ) 17, ஆ) 8, இ) 7, ஈ)12
101. கிரேக்க மொழியில் கலந்த தமிழ்ச்சொல் எது?
அ) இஞ்சி, ஆ) தேக்கு, இ) படகு, ஈ) காயல்.
102. நான் என்னும் வழக்கு இடம்பெற்ற சங்ககால நூல் எது?
அ) பதிற்றுப்பத்து, ஆ) பரிபாடல், இ) கலித்தொகை, ஈ) அகநானூறு.
103. பல + பொருள் = பல்பொருள் என்பது எவ்வகைப் புணர்ச்சி?
அ)இயல்பு, ஆ) தோன்றல், இ) கெடுதல், ஈ) திரிதல்.
104. ஆசாமி என்பது எவ்வகைச் சொல்?
அ) இயற்சொல், ஆ) திரிசொல், இ) திசைச்சொல், ஈ) வடசொல்.
105. தொல்காப்பியக் கடல் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ)எஸ்.வையாபுரிப்பிள்ளை,ஆ)வ.சுப.மாணிக்கம்,இ)மு.வரதராசனார்,ஈ)கா.சு. பிள்ளை.
106. மலையருவி என்னும் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பின் ஆசிரியர்?
அ) அன்னகாமு, ஆ) கி.வா.ஜகந்தாதன், இ) வானமாமலை, ஈ) அழ.வள்ளியப்பா.
107. தனியொரு படைப்பாளனின் தனியொரு படைப்பினை மட்டும் ஆராயும் திறனாய்வு முறை?
அ) வரலாற்றுமுறை, ஆ) முருகியல், இ) விளக்கமுறை, ஈ) விதிமுறை.
108. திராவிட மொழிகளின் அடிச்சொல் அகராதியை உருவாக்கியவர் யார்?
அ) எல்லீஸ், ஆ) பர்ரோ எமனோ, இ) கால்டுவெல், ஈ) ராட்லர்
109. எட்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?
அ) பாரீஸ், ஆ) சென்னை, இ) கோலாலம்பூர், ஈ)தஞ்சாவூர்.
110. திவாகர நிகண்டு எத்தனை பிரிவுகளை உடையது?
அ) 10, ஆ) 11, இ) 12, ஈ) 13.
1 ஆ | 2 அ | 3 ஆ | 4 இ | 5 இ | 6 இ | 7 ஆ | 8 இ | 9 அ | 10 ஆ |
11 அ | 12 ஆ | 13 ஈ | 14 ஆ | 15 இ | 16 ஆ | 17 இ | 18 ஈ | 19 ஆ | 20 ஆ |
21 அ | 22 ஆ | 23 இ | 24 அ | 25 இ | 26 அ | 27 இ | 28 அ | 29 அ | 30 ஆ |
31 இ | 32 இ | 33 இ | 34 ஆ | 35 ஆ | 36 ஆ | 37 ஆ | 38 ஆ | 39 ஆ | 40 ஆ |
41 அ | 42 இ | 43 இ | 44 அ | 45 இ | 46 ஆ | 47 ஆ | 48 ஆ | 49 இ | 50 ஆ |
51 அ | 52 ஆ | 53 ஆ | 54 இ | 55 ஆ | 56 ஆ | 57 அ | 58 ஆ | 59 அ | 60 இ |
61 அ | 62 இ | 63 இ | 64 ஆ | 65 ஆ | 66 ஆ | 67 அ | 68 அ | 69 அ | 70 ஆ |
71 ஆ | 72 அ | 73 இ | 74 இ | 75 அ | 76 இ | 77 ஆ | 78 இ | 79 இ | 80 இ |
81 அ | 82 ஈ | 83 ஆ | 84 ஆ | 85 ஆ | 86 இ | 87 ஆ | 88 அ | 89 அ | 90 ஆ |
91 ஆ | 92 அ | 93 அ | 94 ஆ | 95 இ | 96 ஆ | 97 இ | 98 ஆ | 99 ஆ | 100 இ |
101 அ | 102 ஆ | 103 இ | 104 இ | 105 ஆ | 106 ஆ | 107 இ | 108 ஆ | 109 ஈ | 110 இ |

0 Comments