Ticker

6/recent/ticker-posts

TNPSC - இலக்கணம் வினா விடை











மெய்ப்பாட்டியல் - தமிழ் இலக்கண வினா விடை


1. சிறுமை என்னும் நிலைக்களன் எந்த மெய்ப்பாட்டிற்குரியது?

            அ) நகை, ஆ) அச்சம், இ) மருட்கை, ஈ) இளிவரல்

2.    பண்ணைத்தோன்றிய ----------------- பொருளும் கண்ணிய புறனே

        அ) நானான்கு ஆ) எண்ணான்கு  இ) ஐந்நான்கு, ஈ) இருநான்கு

3. புணர்வு என்னும் நிலைக்களன் எந்த மெய்ப்பாட்டிற்குரியது?

            அ) நகை, ஆ) அழுகை, இ) உவகை, ஈ) மருட்கை

4. அலை என்னும் நிலைக்களன் எந்த மெய்ப்பாட்டிற்குரியது?

            அ) அச்சம், ஆ) வெகுளி, இ) உவகை, ஈ) பெருமிதம்

5. மென்மை என்னும் நிலைக்களன் எந்த மெய்ப்பாட்டிற்குரியது?

            அ) அழுகை, ஆ) உவகை, இ) பெருமிதம், ஈ) இளிவரல்

6. இழவு என்னும் நிலைக்களன் எந்த மெய்ப்பாட்டிற்குரியது?

            அ) அழுகை, ஆ) உவகை, இ) பெருமிதம், ஈ) இளிவரல்

7. அசைவு என்பதன் பொருள் யாது?

அ) பிறரால் தாழ்த்தப்படுதல், ஆ) உறவு உடைமைகளை இழத்தல், 

இ) தன்னிலையிலிருந்து தாழ்தல், ஈ) இல்லாமை

8. குடிகோள் என்பதன் பொருள் யாது?

அ) உடல் உறுப்புகளை வெட்டுதல், ஆ) அடித்தல், 

இ) கீழ்வாழ்வாரைத் துன்பப்படுத்தல், ஈ) உயிரை எடுக்க முனைதல்

9. உடைமை முதலாக தொல்காப்பியர் பிற மெய்ப்பாடுகளை எத்தனை வகையாகக் குறிப்பிடுகிறார்?

            அ) 28, ஆ) 30, இ) 32, ஈ) 34

10. செயல்பாடின்றிச் சோம்பியிருத்தலை தொல்காப்பியர் இந்தக் கலைச் சொல்லின் வழியாகக் கூறுகிறார்?

            அ) துஞ்சல், ஆ) அரற்று, இ) மடிமை, ஈ) முனிதல்

11. களவுக்காலத்தில் பெண்டிர்க்குரிய மெய்ப்பாடுகள் எத்தனை?

            அ) 25, ஆ) 24, இ) 23, ஈ) 22

12. தலைவி தலைவனோடு மனக்கலக்கமுற்று பேசும் மெய்ப்பாடு?

அ)கையறவு உரைத்தல், ஆ) புறம் செயச் சிதைதல், இ) புலம்பித் தோன்றல், 

ஈ) கலங்கிமொழிதல்

13. இன்பத்தை வெறுத்தல் தொடங்கி எது ஈறாக பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் சொல்லப்படுகின்றன?

            அ) மெய்யே என்றல், ஆ) ஒப்புவழி உவத்தல், இ) உறுபெயர் கோடல், ஈ) கலக்கம்.

14. தலைவன் தலைவிக்குரிய ஒப்புமைக் குணங்களாக எத்தனை வரையறுக்கப்படுகிறது?

            அ) 8, ஆ)9, இ) 10, ஈ) 11

15. தலைவன், தலைவிக்கு ஆகாத குணங்களாக எத்தனை வரையறுக்கப்படுகிறது?

            அ) 10, ஆ) 11, இ) 12, ஈ) 13

16. உள்ளுறை உவமை குறித்து தொல்காப்பியத்தின் எந்த எந்த இயல்கள் விளக்குகின்றன?

            அ) அகம், பொருள், ஆ) களவு, கற்பு, இ) அகம், களவு, ஈ) களவு, பொருள்

17. இறைச்சி குறித்து தொல்காப்பியத்தின் எந்த இயல் விளக்குகிறது?

            அ) அகம், ஆ) களவு, இ) கற்பு, ஈ) பொருளியல்

18. உள்ளுறை--------- ஒழிந்ததை நிலம் எனக்

            அ) முதற்பொருள், ஆ) கருப்பொருள், இ) உணவு, ஈ) தெய்வம்

19. உவமத்தின் வகைகள் எத்தனை?

            அ) 2, ஆ) 3, இ) 4, ஈ) 5

20. வெளிப்படையாகக் கூறாமல் மறைத்துக் கூறினால் அது என்ன உவமம்?

            அ) வினை உவமம், ஆ) உள்ளுறை, இ) பயன், ஈ) மெய்

21. உவமை பொதுமைப் பண்பு காரணமாக எத்தனை அடிப்படைகளில் தோன்றும்?

            அ) 3, ஆ) 4, இ) 5, ஈ) 6

22. உள்ளுறை உவமையின் வகைகள் எத்தனை?

            அ) 3, ஆ) 4, இ) 5, ஈ) 6

23.  புலி போலப் பாய்ந்தான் என்பது?

            அ) வினை, உவமை, ஆ) பயன் உவமை, இ) மெய் உவமை, ஈ) உரு உவமை.

24. உவமையின் நிலைக்களங்கள் எத்தனை?

            அ) 3, ஆ) 4, இ) 5, ஈ) 6

25. கிழக்கிடும் பொருளோடு ------ ஆகும்

            அ) மூன்றும், ஆ) நான்கும், இ) ஐந்தும், ஈ) ஆறும்

26. தொல்காப்பியர் கூறும் உவம உருபுகள் எத்தனை?

            அ) 30, ஆ) 32, இ) 34, ஈ) 36

27. உவமையின் நிலைக்களன்கள் ஒவ்வொன்றினுக்கும் எத்தனை உவம உருபுகள் வரையறுக்கப்படுகின்றன?

            அ) 8, ஆ) 9, இ)10, ஈ) 11

28. நளிய என்பது எந்த நிலைக்களத்திற்குரிய உவம உருபு?

            அ) வினை, ஆ)பயன், இ)மெய், ஈ)உரு

29. புரைய என்பது எந்த நிலைக்களத்திற்குரிய உவம உருபு?

            அ) வினை, ஆ)பயன், இ)மெய், ஈ)உரு

30. தகைய என்பது எந்த நிலைக்களத்திற்குரிய உவம உருபு?

            அ) வினை, ஆ)பயன், இ)மெய், ஈ)உரு

31. யாருக்கு உவமை கூறும் போது எந்த வரையறையும் இல்லை?

            அ) தலைவன், ஆ) தலைவி, இ) தோழி, ஈ) செவிலி

32. பிற நிலத்தின் பொருட்களை உவமை கூறாமல் தன் நிலம் சார்ந்தே உவமை கூற யாருக்கு விதிக்கப்பட்டுள்ளது?

            அ) தலைவன், ஆ) தலைவி, இ) தோழி, ஈ) செவிலி

33. உவமை கூறுவதற்கு இடம் வரைவு இல்லாமல் இருப்பவர் யார்?

            அ) தலைவன், ஆ) ஏனோர், இ) தலைவி, ஈ) தோழி

34. உவமை அடுக்கி வரும் இடங்கள் எத்தனை?

            அ) 3, ஆ)4, இ)5, ஈ)6

35. இறைச்சிதானே………………..

அ) கருப்புறத்ததுவே, ஆ) உரிப்புறத்ததுவே, இ) பொருட்புறத்ததுவே, 

ஈ) முதற்புறத்ததுவே

36. மெய்ப்பாட்டியல் தொல்காப்பியத்தின் எந்த அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது?

            அ) பொருள், ஆ) எழுத்து, இ) சொல், ஈ) அணி

37. புகழ்மை என்னும் நிலைக்களன் எந்த மெய்ப்பாட்டிற்குரியது?

            அ) நகை, ஆ) இளிவரல், இ) பெருமிதம், ஈ) அச்சம்

38.  பொறிநுதல் வியர்த்தல்…

அ) முதல் நிலை மெய்ப்பாடு, ஆ) இரண்டாம் நிலை, இ) மூன்றாம் நிலை, ஈ) நான்காம் நிலை

39.  உள்ளுறை உவமத்தின் பயன்?

            அ) சுவை, ஆ) கற்பனை, இ) வடிவம், ஈ) உணர்ச்சி

40. பொருளெதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே – எனத் தொல்காப்பியர் கூறும் உவமம் யாது?

            அ) வினை, ஆ) பயன், இ) சுட்டிக் கூறா உவமம், ஈ) சுட்டிக்கூறிய உவமம்

41. மாறுபட்ட உவம உருபினைத் தேர்வு செய்க?

            அ) கடுப்ப, ஆ) புல்ல, இ) ஏய்ப்ப, ஈ) மருள

42. பின்வருவனவற்றுள் அச்சம் என்னும் மெய்ப்பாட்டிற்கான நிலைக்களம் எது?

            அ) பிணி, ஆ) பாம்பு, இ) இறை, ஈ) உறுப்பறை.

43. இறைச்சி எப்பாடல்களுக்கு மட்டுமே உரியது?

            அ) அகம், ஆ) புறம், இ) அகப்புறம், இ) புறப்புறம்

44. தான் அறிந்த பொருட்களை மட்டுமே உவமையைக் கூறவேண்டியது யார்?

            அ) தலைவன், ஆ) தலைவி, இ) தோழி, ஈ) செவிலி

45. வீழ என்பது என்பது எந்த நிலைக்களத்திற்குரிய உவம உருபு?

            அ) வினை, ஆ) பயன், இ)மெய், ஈ)உரு

46. உவமையும் பொருளும் -------- வேண்டும்

            அ) தனித்து நிற்றல், ஆ) வேறுபட்டு நிற்றல், இ) ஒத்துநிற்றல், ஈ) ஏற்று நிற்றல்

47. பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் மொத்தம் எத்தனை?

            அ) 18, ஆ) 19, இ) 20, ஈ) 21.

48. அழிவில் கூட்ட மெய்ப்பாடுகள் எத்தனை?

            அ) 6, ஆ) 7, இ) 8, ஈ) 9

49. பொறாமைக்குணத்தை மெய்ப்பாட்டினுள் இவ்வாறு அழைப்பர்?

            அ) நிம்பிரி, ஆ) மடிமை, இ) மறப்பு, ஈ) புறமொழி

50. நிரல்பட அணிந்த அணிகளைத் தடவும் தலைவியின் மெய்ப்பாடு?

அ) காது ஒன்று களைதல், ஆ) கூழை விரித்தல், இ) ஊழ் அணி தைவரல், 

ஈ) உடைபெயர்த்து உடுத்தல்.



By

 

Post a Comment

0 Comments