
அகம், புறம் - தமிழ் இலக்கண வினா விடை
1. புறப்பொருள் வெண்பாமாலையின் திணைகள் எவ்வாறு சுட்டப்படுகின்றன?
அ) காண்டம், ஆ) படலம், இ) பெருந்திணை, ஈ) பொதுவியல்
2. வில்லேர் உழவர் என்று புறப்பொருள் வெண்பாமாலை யாரைக் குறிக்கிறது
அ) வெட்சி வீரர், ஆ) கரந்தை வீரர், இ) வஞ்சி வீரர், ஈ) காஞ்சி வீரர்
3. நொச்சியார் அரணத்தை உழிஞையார் எதைக்கொண்டு உழுது வித்திடுவர்?
அ) காளை, ஆ) குதிரை, இ) யானை, ஈ) கழுதை
4. குதிரை மறம் என்னும் துறை பயின்று வரும் திணைகள் யாவை?
அ) உழிஞை, தும்பை, ஆ) உழிஞை, வாகை, இ) நொச்சி, தும்பை, ஈ) நொச்சி, வாகை
5. வெட்சித் திணையில் இடம்பெறும் காரிப்பிள்ளை என்பது யாரைக் குறிக்கிறது?
அ) கரிக்குருவி, ஆ) ஒற்றர், இ) வெட்சி மறவன், ஈ) பிள்ளை நிமித்தகன்
6. முன் தேர்க்குரவை, பின் தேர்க்குரவை பயின்று வரும் திணைகள்
அ) உழிஞை, வாகை, ஆ) காஞ்சி, தும்பை, இ) தும்பை, வாகை, ஈ) காஞ்சி, உழிஞை
7. வஞ்சித்திணையின் துறைகள் எத்தனை?
அ) 21, ஆ) 22, இ) 20, ஈ) 24
8. பகை வீரனின் தலையைக் கொண்டு வந்த மற்றொரு வீரனைக் காஞ்சி மன்னன் சிறப்பிப்பது எந்தத் துறை?
அ) தலைக்காஞ்சி, ஆ) தலைமாராயம், இ) தலையொடுமுடிதல், ஈ) மறக்காஞ்சி
9. நொச்சித்திணை எத்தனை துறைகளைக் கொண்டது?
அ) 9, ஆ) 7, இ) 8, ஈ) 6
10. புறப்பொருள் வெண்பாமாலை எந்த நூலினை அடியொற்றி எழுதப்பட்டது?
அ) தொல்காப்பியம், ஆ) பன்னிருபாட்டியல், இ) பன்னிருபடலம், ஈ) வீரசோழியம்
11. வாகை என்பது?
அ) புறத்திணை, ஆ)புறப்புறத்திணை, இ) அகத்திணை, ஈ) அகப்புறத்திணை
12. தொல்காப்பியர் தலைத்தோற்றம் துறையை எப்பெயரால் குறிப்பிடுகிறார்?
அ) ஆகோள், ஆ) சுரத்துய்த்தல், இ) நுவலுழித் தோற்றம், ஈ) தலைத்தோற்றம்
13. அதிரப் பொருவது
அ) வாகை, ஆ) தும்பை, இ) நொச்சி, ஈ) காஞ்சி
14. காஞ்சித்திணை எந்த அகத்திணைக்குப் புறனாக அமைகிறது
அ) கரந்தை, ஆ) வஞ்சி, இ) கைக்கிளை, ஈ) பெருந்திணை
15. அகங்கை இரண்டுடையார்க்கு புறங்கை நான்காகாதவாறு போல என்று கூறியவர்
அ) இளம்பூரணர், ஆ) ஐயனாரிதனார், இ) நச்சினார்க்கினியர், ஈ) பேராசிரியர்
16. பகைவர்நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்தல்
அ) கொற்றவஞ்சி, ஆ) உழுபுலவஞ்சி, இ) மழபுலவஞ்சி, ஈ) பெருவஞ்சி
17. அரசனின் பிறந்தநாளைச் சிறப்பித்துப் பாடுவது?
அ) மணமங்கலம், ஆ) பொலிவுமங்கலம், இ) நாள்மங்கலம், ஈ) பரிசில்விடை
18. நடுவுநிலைத்திணை என்று தொல்காப்பியர் குறிப்பிடுவது
அ) பாலை, ஆ) குறிஞ்சி, இ) முல்லை, ஈ) மருதம்
19. தொல்காப்பியர் குறிப்பிடாமல் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் புதிய துறை
அ) உழிஞை, ஆ) தும்பை, இ) நொச்சி, ஈ) வாகை
20. புறப்பொருள் வெண்பாமாலை எவ்வகை யாப்பினால் எழுதப்பட்டது?
அ) ஆசிரியப்பா, ஆ) கலிப்பா, இ) வெண்பா, ஈ) வஞ்சிப்பா
21. பெருந்தேவனார் எவ்விலக்கண நூலின் உரையாசிரியர்
அ) யாப்பருங்கலம், ஆ) நேமிநாதம், இ) வீரசோழியம், ஈ) இலக்கண விளக்கம்
22. மாறனகப்பொருள் நூலின் ஆசிரியர்
அ) மயிலைநாதர், ஆ) சங்கரநமச்சிவாயர், இ) திருக்குருகைப் பெருமாள் கவிராயர், ஈ) சாமிநாத தேசிகர்.
23. தொன்னூல் விளக்கத்தின் உரையாசிரியர்
அ) சுவாமிநாத தேசிகர், ஆ) வீரமாமுனிவர், இ)ஜி.யூ.போப், ஈ) வைத்தியநாத தேசிகர்
24. தொல்காப்பியத்திற்கு பேராசிரியர் உரை எழுதிய இயல்கள்
அ) பொருள் முன்னான்கு இயல்கள், ஆ) பொருள் இடை நான்கு இயல்கள், இ) பொருள் பின்னான்கு இயல்கள், ஈ) சொல் பின்னான்கு இயல்கள்
25. விளிமரபு என்பது சொல்லதிகாரத்தின் எத்தனையாவது இயல்
அ) 3, ஆ) 5, இ) 4, ஈ) 6
26. உரையாசிரியர் என்று அழைக்கப்படுபவர்
அ) பேராசிரியர், ஆ) சேனாவரையர், இ) நச்சினார்க்கினியர், ஈ) இளம்பூரணர்
27. நன்னூல் எழுத்ததிகாரத்தின் பகுதிகள் எத்தனை?
அ) 11, ஆ) 10, இ) 12, ஈ) 13
28. இறையனார் அகப்பொருள் எத்தனை நூற்பாக்களைக் கொண்டுள்ளது
அ) 60, ஆ)70, இ) 80, ஈ) 55
29. குற்றேவல் செய்பவர்
அ) இளையர், ஆ) பாங்கர், இ) பாகர், ஈ) அறிவர்
30. துயிலும்போதும் களிப்பின் போதும் மணக்கும் முறை
அ) தெய்வம், ஆ) பைசாசம், இ) இராக்கதம், ஈ) பிரசாபத்தியம்
31. தலைவனுடைய காதலைத் தோழி இழித்துக் கூறுதல்
அ) இயற்பட மொழிதல், ஆ) இயற்பழித்தல், இ) படைத்துமொழிதல், ஈ) சேட்படை
32. மனைவியை இழந்த தலைவனின் தனிமைநிலை
அ) தாபதநிலை, ஆ) சுரநடை, இ) தபுதாரநிலை, ஈ) முதுபாலை
33. தூதிற் பிரிவுக்குரிய காலம்
அ) 1, ஆ) 2, இ) 3, ஈ) 4
34. நெல்லரிகிணை என்னும் இசைக்கருவி
அ) குறிஞ்சி, ஆ) முல்லை, இ) மருதம், ஈ) நெய்தல்
35. பாடி என்னும் ஊர் எத்திணைக்குரியது
அ) குறிஞ்சி, ஆ) முல்லை, இ) மருதம், ஈ) நெய்தல்
36. தலைவி தான் கொண்ட களவு ஒழுக்கத்தை முறையாக வெளிப்படுத்தல்
அ) வரைவு மலிதல், ஆ) அறத்தொடு நிலை, இ) உடன்போக்கு, ஈ) மீட்சி
37. களவில் கூற்றுக்கு உரியவர்கள் எத்தனை பேர்
அ) 6, ஆ) 7, இ) 8, ஈ) 9
38) கற்பில் கூற்றுக்கு உரியவர்கள் எத்தனை பேர்
அ) 13, ஆ) 14, இ) 15, ஈ) 16
39) சிறுபொழுதின் கால அளவு?
அ) 10 நாழிகை, ஆ) 12 நாழிகை, இ) 8 நாழிகை, ஈ) 9 நாழிகை
40) நம்பியகப்பொருள் உணர்த்தும் கற்புப் பிரிவின் வகைகள் எத்தனை?
அ) 8, ஆ) 7, இ) 6, ஈ) 5
41) பாங்கி யாரிடம் அறத்தொடு நிற்பாள்
அ) தோழி, ஆ) நற்றாய், இ) செவிலித்தாய், ஈ) தலைவன்
42) கைகோள் எத்தனை வகைப்படும்
அ) 3, ஆ) 2, இ) 4, ஈ) 5
43) வருணன் மேய
அ) காடுறை, ஆ) தீம்புனல், இ) மைவரை, ஈ) பெருமணல்
44) சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர் என்னும் நூற்பா இடம்பெற்ற இயல்
அ) களவியல், ஆ) அகத்திணையியல், இ) கற்பியல், ஈ) பொருளியல்
45) கொடிச்சி எந்நிலத்திற்குரிய பெண்பால் பெயர்
அ) குறிஞ்சி, ஆ) முல்லை, இ) மருதம், ஈ) நெய்தல்
46) மகிழ்நன் எந்நிலத்திற்குரிய ஆண்பால் பெயர்
அ) குறிஞ்சி, ஆ) முல்லை, இ) மருதம், ஈ) நெய்தல்
47. கழுநீர் எந்நிலக்குரிய பூ
அ) குறிஞ்சி, ஆ) முல்லை, இ) மருதம், ஈ) நெய்தல்
48. சாதாரி எந்நிலத்திற்குரிய பண்
அ) குறிஞ்சி, ஆ) முல்லை, இ) மருதம், ஈ) நெய்தல்
49. பெருமையும் உரனும் ஆடூஉ மேன
அ) தொல்காப்பியம், ஆ) நம்பி அகப்பொருள், இ) மாறனகப்பொருள், ஈ) இறையனார் அகப்பொருள்
50. வரைவு என்பது
அ) களவு, ஆ) காந்தர்வம், இ)திருமணம், ஈ) உடன்போக்கு
0 Comments