
அறிவியல் கேள்வி பதில்கள் - 3
உயிரியியல்
* முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு
* நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு
* முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு
* கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா
* பின்னுகொடி தாவரம் - அவரை
* ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை
* பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்
* டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்
* பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - எய்டஸ்
* தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்
* பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.
* தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.
* பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்f
* இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்
* டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்
* முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்
* நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்
* ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்
* படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்
* மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி
* அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்
* இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்
* பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)
* ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்
* 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று
* கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்
* மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை
* ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்
* மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்
* வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்
* ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி
* எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
* முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி
* பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்
* முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு
* இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு
* பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் - பாஸ்விடின், லிப்போ விட்டலின்
* மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்
* அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்
* வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்
* புவி நாட்டம் உடையது - வேர்
* இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்
* யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்
* டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை
* முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா
* நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்
* மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்
* அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு
* பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்
*விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி
*நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்
* இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
0 Comments